கொரோனா தொற்றில் இருந்து மீண்ட குடும்பப்பெண் திடீரென உயிரிழப்பு!

வடமராட்சியில் கொரோனோ தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்திருந்த குடும்ப பெண்ணொருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

வடமராட்சி நவிண்டிலை சேர்ந்த தவேந்திரன் துளசிகா (வயது 37) எனும் குடும்ப பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் சில வாரங்களுக்கு முன்னர் கொரோனோ தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று குணமாகி இருந்தார் எனவும் , அந்நிலையில் திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார் என உறவினர்கள் தெரிவித்தனர்.

அதேவேளை குறித்த பெண் வெளிநாட்டில் உள்ளவரை திருமணம் முடித்திருந்ததாகவும் , விரைவில் வெளிநாட்டில் உள்ள தனது கணவனிடம் செல்ல இருந்தார் எனவும் உறவினர்கள் தெரிவித்தனர் .