கொப்பேக்கடுவவின் நினைவு தூபியை பார்வையிட பெருமளவானோர் வருகை

யாழ். இராணுவ கட்டளை தளபதியாக கடமையாற்றிய ரென்சில் கொப்பேக்கடுவவின் நினைவு தூபியைப் பார்வையிடுவதற்கு பெருமளவான மக்கள் வருகை தருகின்றனர்.

kopekaduva-2

ஊர்காவற்துறை வீதியில் இருந்து அராலிக்கு செல்லும் காட்டுப் பகுதியிலேயே இந்த நினைவுத் தூபி உள்ளது.இதனை நாள்தோறும் அதிகளவான தென்னிலங்கை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர்.

1992ஆம் ஆண்டு அராலி வீதியின் ஊடாக வாகனத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போது விடுதலை புலிகளின் கண்ணிவெடித் தாக்குதலில் கொப்பேக்கடுவ கொல்லப்பட்டார்.

kopekaduva-1

குறித்த இடத்தில் அவர் பயணித்த வாகனத்தின் எஞ்சிய பாகங்கள் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதுடன் அந்த இடத்தில் நினைவுத்தூபியொன்றும் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.