கொன்சலிற்றா வழக்கு, மரண விசாரணை கட்டளைக்காக ஒத்திவைப்பு

jeromey-kurunagarகுருநகரில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட ஜெரோம் கொன்சலிற்றாவின் வழக்கின் மரண விசாரணை தொடர்பான கட்டளைக்காக யூலை 24 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குருநகர் பெரியகோயிலுக்கு பின்புறத்தில் உள்ள கிணற்றில் இருந்து சடலமாக ஏப்ரல் 14 ஆம் திகதி மீட்கப்பட்டிருந்தார்.

அது தொடர்பிலான வழக்கு இன்று யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிபதி சிவகுமார் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இன்று சட்டவைத்திய அதிகாரி சிவமோகன் கொன்சலிற்றாவின் மரணம் தொடர்பில் சாட்சியமளித்தார். குறித்த பெண் எதுவிதமான காயங்களுக்கும் உட்பட்டிருக்கவில்லை என்றும் கன்னித்தன்மையுடனேயே இருந்தார் என்றும் இவரின் மரணம் நீரில் மூழ்கியே ஏற்பட்டது என்றும் மன்றில் சாட்சியமளித்தார்.

எனவே பொலிஸாரின் விசாரணைகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில் மரண விசாரணை தொடர்பான கட்டளைக்காக எதிர்வரும் 24 ஆம் திகதி வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.