சங்காணை பகுதியில் 54 வயது முதியவர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அராலி கிழக்கு ஐயனார் கோவிலடி பகுதியைச் சேர்ந்த செல்வரத்தினம் ஞானரத்தினம் என்பவரே, இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவர் நேற்று காலையில் சங்காணை சந்தைக்கு பொருட்கள் வாங்குவதற்கு சென்றுள்ளார். பின் வீடு திரும்பும் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அராலி – சங்கானை வீதியில் தலைவேறு உடம்பு வேறாக வெட்டப்பட்ட நிலையில் இவர் சடலமாக காணப்பட்டுள்ளார்.
இதனைக் கண்ட பொதுமக்கள் வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு சென்ற அவர்கள் சடலத்தினைப் பார்வையிட்டுள்ளனர்.
இது குறித்த மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.