கொக்குவில் பொற்பதி வீதியில் சித்த வைத்தியர் சடலமாக மீட்பு

body_foundகொக்குவில் பொற்பதி வீதியில் வசித்து வந்த சித்த வைத்தியர் நேற்று திங்கட்கிழமை மாலை தனது வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். 62 வயதான துரைசாமி ஜெயரத்தினம் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வைத்தியர் மற்றும் அவரது மனைவி இருவரும் வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர். மனைவி வேலை முடிந்து மாலை வீடு திரும்பிய வேளை, வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் இருந்ததுடன், வீட்டிற்குள் இருந்த மேசையின் மீது துணியினால் போர்க்கப்பட்ட நிலையில் வாய் மற்றும் மூக்கினால் இரத்தம் வடிந்த நிலையில் தனது கணவன் இறந்து கிடந்ததை கண்டதாக மனைவி கூறினார்.

இதேவேளை, கழுத்து பகுதியில் கம்பியினால் நெரிக்கப்பட்ட அடையாளம் காணப்பட்டதுடன், சடலத்தின் மீது மோட்டார் சைக்கிளின் கேபிள் இருந்ததாகவும் மனைவி கூறினார்.

அத்துடன், சமையல் அறையில் பொருட்கள் அனைத்தும் சிதறப்பட்ட நிலையில் இருந்ததாகவும் வீட்டில் இருந்த 6 பவுண் நகைகள் களவாடப்பட்டுள்ளதாகவும் மனைவி மேலும் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts