கொக்குவிவில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் இரண்டு மாணவர்களுக்கு இடையே எழுந்த முரண்பாடு கத்திக்குத்தில் முடிவுற்றது.
நேற்று புதன்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் ஜீ.சீ.ஈ சாதாரண தர மாணவர் ஒருவர் முகத்தில் காயமடைந்தார். நேற்று பாடசாலையில் அதிபர், உப அதிபர் இருவரும் விடுமுறையில் இருந்த சமயம் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவரே கத்தியால் குத்தியுள்ளார். இது குறித்து இன்று வியாழக்கிழமை பாடசாலை அதிபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.
இதனையடுத்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வூட்லர் பாடசாலைக்கு சென்று குறிப்பிட்ட சம்பவம் சம்பந்தமான விசாரணைகளை மேற்கொண்டுள்ளார். பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்திவருகின்றனர்.