கொக்குவில் இந்துக்கல்லூரியின் புதிய அதிபராக திரு.ஞானகாந்தன் நியமனம்!

கொக்குவில் இந்துக்கல்லூரியின் புதிய அதிபராக திரு ஞானகாந்தன் நியமனம் பெற்றுள்ளார் .வட மாகாண கல்வித்திணைக்களத்தில் இடம் பெற்ற நேர்முகத்தேர்வில் தெரிவு செய்யப்பட்டு கல்வி அமைச்சின் செயலாளரினால் இவருக்கு நியமனக்கடிதம் இன்று வழங்கப்பட்டுள்ளது.

கொக்குவில் இந்துக்கல்லூரியின் அதிபராக இதுவரை காலமும் பணியாற்றிய திரு அகிலதாஸ் தென்மராட்சி கல்விவலையப்பணிமனைக்கு மாற்றம்செய்யப்பட்டிருந்தார். அதன்பின்னணியாக அவரது நிர்வாக முறைகேடுகள் காரணமாயிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுவரை காலமும் யாழ் கனகரத்தினம் மகா வித்தியாலய அதிபர் ஆக கடமையாற்றிய புதிய அதிபர் ஞானகாந்தன் தமது கடமைகளை  வெகு விரைவில் பெறுப்பேற்பார் என தெரிவிக்கப்படுகிறது. இவர் அதற்கு முன்னர் யாழ் இந்து ஆரம்பபாடசாலையின் அதிபராக நீண்டகாலம் கடமையாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது