கைத்தொலைபேசி பாவனையாளர்கள் தமக்கான தொடர்புகளைப் பெற்றுக்கொள்ளும் போது அவற்றைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. இந்தக் கோரிக்கை கைத்தொலைபேசி விற்பனையாளர்களுக்கும் விடுக்கப்பட்டுள்ளது.
இதுவரைக்காலமும் தமது தொலைபேசியைப் பதிவு செய்து கொள்ளாதவர்கள் அவற்றைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று தொலைத் தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு கேட்டுள்ளது.
இந்தக் கோரிக்கை, தேவையற்ற குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கிலேயே விடுக்கப்பட்டுள்ளது என்று ஒழுங்கமைப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.