கைதடி பாலத்தில் இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; 24பேர் காயம்

accidentகைதடி பாலத்தில் இன்று முற்பகல் 11 மணியளவில் இரு தனியார் பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 24 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த பஸ் ஒன்றும் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த பஸ் ஒன்றுதே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

விபத்தில் காயமடைந்தவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.