கைதடியில் பேரூந்து மீது கல்வீச்சு, 4 பேர் காயம்!

attack-attackகைதடியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேரூந்து மீது கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் அதில் பயணம் செய்த நால்வர் காயமடைந்தனர்.

இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து தங்காலை நோக்கிச் சென்றுகொண்டிருந்த பேரூந்து மீதே கைதடியில் வைத்து கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் காயமடைந்த நால்வரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகளினை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஏ – 9 வீதியில் பயணிக்கும் பேரூந்துகள் மீது அண்மைக்காலமாக கல்வீச்சுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக சாரதிகள் கவலை தெரிவித்துள்ளனர்.