கைதடிப் பாலத்தில் விபத்து!- இரு இளைஞர்கள் படுகாயம்

accidentகைதடிப் பாலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்து, யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் ஒருவர் அவரச சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழிலிருந்து வெளிவரும் பத்திரிகையொன்றின் விநியோகப் பணியாளர்கள் இருவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளனர்.

இன்று அதிகாலை 3.40 மணியளவில் பத்திரிகைகளை விநியோகப் படுத்துவதற்காக சிறியரக வடி வாகனத்தில் சென்று கொண்டிருந்வேளை, வாகனம் கட்டுப்பட்டை இழந்து கைதடிப் பாலத்துடன் மோதியதில் சாரதி தூக்கி வீசப்பட்டுள்ளார்.

இந்த விபத்துச் சம்பவத்தில் பளையைச் சேர்ந்த சவுந்தாரம் பிரகாஸ் (வயது 21), நாவக்குழியைச் சேர்ந்த எஸ்.தனராஜ் (வயது 23) என்பவர்களே படுகாயமடைந்துள்ளனர்.

இவ்விபத்துத் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Recommended For You

About the Author: Editor