கைகலப்பை தடுக்க முற்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் காயம்

இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற கைகலப்பை தடுக்க முற்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் திங்கட்கிழமை இரவு இந்த கைகலப்பு இடம்பெற்றது. இதனை தடுக்க முற்பட்டபோதே மேற்படி உத்தியோகஸ்தர் தலையில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி பொலிஸ் உத்தியோகஸ்தர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.