பாடசாலையொன்றின் முன்றலில் சக மாணவர் ஒருவரின் தாக்குதலில் படுகாயமடைந்த யாழ். அரியாலை மாம்பழம் சந்தியைச் சேர்ந்த பி.ஹரிதாஸ் (வயது 16) இன்று வெள்ளிக்கிழமை (27) யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.
படுகாயமடைந்த மாணவனுக்கும் மற்றைய மாணவனுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது. இந்த நிலையில், பாடசாலை முடிவடைந்த பின்னர் மற்றைய மாணவன் இரும்புக்கம்பியால் மேற்படி மாணவனை தாக்கியுள்ளான்.
இது தொடர்பில் விரிவான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.