கூட்டுறவில் அரசியல் தலையீடுகள்: சுகிர்தன்

sugirthan-tnaகூட்டுறவுச் சபையில் அரசியல் தலையீடுகள் அதிகமாகக் காணப்படுவதினால் கூட்டுறவின் வளர்ச்சி மந்தகதியில் இருப்பதாக வடமாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் தெரிவித்துள்ளார்.

கூட்டுறவு பெரியார் அமரர் வீரசிங்கத்தின் 49ஆவது நினைவு தினமும் 91ஆவது சர்வதேச கூட்டுறவு தினவிழாவும் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று வியாழக்கிமை நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாண கூட்டுறவு சபையில் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தாவின் தலையீடும், வன்னியில் அமைச்சர் றிசாத் பதியுதினின் தலையீடும் காணப்படுகின்றது. யுத்தத்திற்கு முன்னர் இருந்த கூட்டுறவு வளர்ச்சியினைவிட அதற்கு பின்னர் இருந்த கூட்டுறவு வளர்ச்சி மிகவும் மந்த கதியாகவே காணப்பட்டது. இதற்கு உண்மையான காரணம் இக்கூட்டுறவு சபையில் அரசியல் தலையீடுகள் காணப்படுகின்றமை ஆகும்.

இனிவரும் காலங்களில் இந்த கூட்டுறவு சபையை கொண்டு நடத்துவதற்கேற்ற நடுவர், பணியாளர்கள் அவசியமெனவும் சிறந்தவர்கள் கூட்டுறவைச் செயற்படுத்தும் பட்சத்தில் இதுவரை காலமும் இழந்தவற்றிலிருந்து முன்னோக்கி செல்ல முடியுமெனவும் கூட்டுறவு சபையானது சரியான முறையில் தெரிவு செய்யப்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.

அத்துடன் ஆரம்பகால கூட்டுறவு வளர்ச்சியை கூட்டுறவாளர்களே பொறுப்பேற்க வேண்டுமெனவும் கூட்டுறவில் வரும் இலாப நட்டங்களை கூட்டுறவாளர்களே பொறுப்பெடுக்க வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி

கூட்டுறவு பெரியார் வீரசிங்கத்தின் நினைவு தினம்