கூட்டுப் பிரார்த்தனைக்குத் தடை!

வலி.வடக்கில் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி சபாபதி நலன்புரி முகாமில் இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் நடத்தப்படவிருந்த கூட்டுப் பிரார்த்னைக்கு பொலிஸாரும் இராணுவப் புலனாய்வாளர்களும் தடை விதித்துள்ளனர் என்று அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இன்று அப்பகுதிக்குச் சென்ற பொலிஸாரும் புலனாய்வாளர்களும் அங்கு அமைக்கப்பட்டிருந்த கொட்டகைகளை அகற்றும் படி ஏற்பாட்டாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அங்கு அமைக்கப்பட்டிருந்த கொட்டகைகள் அகற்றப்பட்டு, கூட்டுப் பிரார்த்தனையும் நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று பிற்பகல் 2.30 மணிக்கு கூட்டுப்பிரார்த்தனை ஏற்பாட்டாளர்கள் நல்லுர்ப் பகுதியிலுள்ள விடுதி ஒன்றில் ஊடகவியலாளர் கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளனர்.