கூட்டமைப்பு வேட்பாளர் ஐங்கரநேசன் வீட்டின் மீது கழிவு எண்ணெய் தாக்குதல்

Inkaranesa-TNAவடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் ஐங்கரநேசன் வீட்டின் மீது இனம்தெரியாதவர்களால் கழிவு எண்ணெய் ஊற்றப்பட்டு வீட்டு வாசலில் பூசணிக்காய் வெட்டி வைக்கப்பட்டுள்ளது.

யாழ். திருநெல்வேலி பிரதேசத்தில் அமைந்துள்ள அவரது வீட்டு மதில் மற்றும் வாசல் கதவு என்பவற்றுக்கு நேற்று நள்ளிரவு இனம் தெரியாத நபர்களினால் கழிவு எண்ணெய் ஊற்றப்பட்டு உள்ளதுடன் பூசணிக்காய் ஒன்றும் வாசலில் வெட்டி வைக்கப்படுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிசில் முறைப்பாடு செய்யவுள்ளதாக ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.