கூட்டமைப்பு வேட்பாளர்கள் – பொதுநலவாய தேர்தல் கண்காணிப்பாளர்கள் சந்திப்பு

TNA-pothunalayaதமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கும் பொதுநலவாய நாடுகளின் செயலகத்தைச் சேர்ந்த தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இச் சந்திப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். அலுவலகத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.

இதன்போது வேட்பாளர்கள் முகங்கொடுக்கின்ற பிரச்சினைகள் சம்பந்தமாகவும், தற்போதைய நிலைமையில் தேர்தல் அத்துமீறல்கள் இடம்பெறலாம் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் மிகவும் விரிவாக எடுத்துக் கூறினார்கள்.

இவ்விடயத்தினை பொதுநலவாய நாடுகளின் கண்காணிப்பாளர்கள் மிகவும் ஆர்வமாக கேட்டறிந்து கொண்டனர்.

இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை வேட்பாளர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், பா.கஜதீபன், சீ.வீ.கே சிவஞானம், அனந்தி எழிலன் உள்ளிட்ட பல வேட்பாளர்களும், பொதுநலவாய நாடுகளின் செயலகத்தைச் சேர்ந்த தேர்தல் கண்காணிப்பாளர்களான அம்னா மற்றும் மார்ட்டீன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

Recommended For You

About the Author: Editor