கூட்டமைப்பு நாளை அமெரிக்கா பயணம்!

tnaதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர், மாகாண சபை உறுப்பினர் ஒருவர் என மூன்று பேர் நாளை திங்கட்கிழமை அமெரிக்கா பயணமாகின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன் மற்றும் வடக்கு மாகாண சபை உறுப்பினரான அனந்தி சசிதரன் ஆகியோரே அமெரிக்கா பயணமாகவுள்ளனர்.

புலம்பெயர் தமிழர்களால் அமெரிக்காவில் ஒழுங்கு செய்யப்பட் டுள்ள நிகழ்வு ஒன்றில் பங்குபற்றுவதற்காகவே இவர்கள் நாளை அங்கு பயணமாகவுள்ளனர். அடுத்த மாதம் முதல் வாரத்தில் இவர்கள் இந்தியாவுக்கும் செல்லவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.