கூட்டமைப்பு ஆதரவாளர்கள் 40 பேர் கைது!

arrest_1தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் 40 பேரை இராணுவத்தினர் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.

தேர்தல் துண்டுபிரசுரங்களை விநியோகித்து கொண்டிருந்தவர்களே ஒரு மணிநேரத்திற்கு முன்னர் கொடிகாமம் பிரதேசத்தில் வைத்து இராணுவத்தினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டிருப்பதாகவும் இது தேர்தல்கள் சட்டத்திட்டங்களை மீறும் நடவடிக்கை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவர்களில் 36 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் நால்வர் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.