கூட்டமைப்பு அரசின் கைக்கூலி: துவாரகேஸ்வரன்

thuvareswara-makesswaran-UNPஅரசின் கைக்கூலியாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு செயற்படுவதாக ஜக்கிய தேசிய கட்சியின் வட மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளர் தியாகராசா துவாரகேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ். ஊடக மையத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

“வடக்கு கிழக்கில் அரசுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்று கருதி தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரை ஆட்சி பீடம் ஏற்றி ஏனைய கட்சிகளுக்கு எதிராக வன்முறையை தூண்டி விடுவதே அரசின் நோக்கமாக இருக்கின்றது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றால் அங்கு தமிழ் தேசியம் இருக்கு, பயங்கரவாதம் இல்லை என கூறலாம்.

அத்துடன், அனைத்து அதிகாரங்களையும் கட்டுப்படுத்தி மத்திய அரசில் எந்த மாற்றமும் இடம்பெறாது தடுப்பதற்கான வழிகளையும் அரசாங்கம் முன்னெடுக்கின்றது. அந்த வகையில், இந்த தேர்தல் நியாயமான முறையில் நடக்குமென்பதை நினைக்கவில்லை என்றும் அண்மையில் சாவகச்சேரியில் நடைபெற்ற சம்பவமும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தேர்தல் பரப்புரை கூட்டமும் மந்த நிலையில் காணப்படுகின்றது.

இந்த நிலமைகளை பார்க்கும் போது ஆளும் கட்சியினர் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை இல்லை. அத்துடன், புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் பல்வேறு வன்முறை சமபவங்களை கட்டவிழ்த்து வருகின்றார். அவ்வாறான வன்முறை சம்பவங்களை நிரூபிப்பதற்கும் தயாராக உள்ளேன். இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் யாராவது தன்னுடன் பகிரங்க விவாதத்திற்கும் வருமாறு அழைப்புவிடுத்தார்”.