கூட்டமைப்பிற்கு எதிராக துண்டுப்பிரசுரம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக வட மாகாணத்தில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலேயே இந்த துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது.

hand(3)

போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம் – ஜனநாயக ஜக்கிய முன்னனி எனும் கட்சியினாலேயே இந்த துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த கட்சியே இரட்டை இலை சின்னத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எனும் பெயரில் வட மாகண சபை தேர்தலில் போட்டியிடுவதாகவும் குறித்த துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.