கூட்டமைப்பின் வேட்பாளர் அச்சுறுத்தல்

tnaதமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் யாழ். மாநர சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் நேற்று புதன்கிழமை புலனாய்வாளர்களினால் அச்சறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

அச்சுறுத்தும் வகையில் ஆரியாலை, புங்கன்குளம் வீதியில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரும் மாநகர உறுப்பினருமான விந்தன் கனகரட்ணத்தின் வீட்டை துவிச்சக்கர வண்டியில் வந்த மூன்று புலனாய்வாளர்கள் நேற்று புதன்கிழமை படம் பிடித்துச் சென்றுள்ளனர்.

அத்துடன் இவர் தொடர்பாக அருகில் உள்ள வீடுகளுக்குச் சென்ற புலனாய்வாளர்கள், இவர் முன்னாள் போராளியா?, வன்னியில் வசித்தவரா?, இவரின் குடும்ப விபரங்கள் அவர் எத்தனை வாகனங்கள் வைத்திருக்கிறார், எந்த நேரம் வீட்டுக்கு வருவார் என்றும் மாநகர சபை உறுப்பினராக இப்பகுதி மக்கள் வாக்களித்திருந்தார்களா போன்ற பல்வேறு விபரங்களை அவர் கேட்டறிந்து கொண்டதாக வேட்பாளர் விந்தன் தெரிவித்தார்.

இந்த அச்சுறுத்தல் தொடர்வில் உடனடியாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவிடம் தெரிவித்ள்ளதாகவும் இந்த அச்சுறுத்தல் தொடர்பில் எழுத்து மூலம் சமர்ப்பிக்குமாறு மாவை கேட்டுள்ளதாக விந்தன் கனகரட்டணம் தெரிவித்தார்.

இதேவேளை கூட்டமைப்பின் வேட்பாளர்களான சட்டத்தரணி சயந்தன் மற்றும் விடுதலைப் புலிகளின் முக்கியத்தர் எழிலனின் மனைவி ஆனந்தி ஆகியோருக்கும் இராணுவத்தினர் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.