கூட்டமைப்பின் வெற்றி முஸ்லிம் மக்களுக்கு மகிழ்ச்சி

tna_members_jaffnaவடமாகணசபைத் தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்பின் சார்பில் வெற்றி பெற்று முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள க.வி. விக்னேஸ்வரனுக்கு யாழ் முஹம்மதியா ஜீம்மா பள்ளி வாசல் பிரதம இமாம் மஹ்மூத் பலாஹி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், நடந்து முடிந்த தேர்தலில் தமிழரசுக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. அதில் க.வி.விக்னேஸ்வரன் ஆகிய நீங்கள் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள்.

தற்போது இவ்வெற்றியை கொண்டாடும் உங்களுக்கும் ஏனைய கட்சி அங்கத்தவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

மேலும் இவ்வெற்றியில் யாழ் முஸ்லிம் மக்களும் கணிசமான பங்களிப்புகளை வழங்கியுள்ளனர். இவ் வெற்றியானது அவர்களது முகங்களிலும் காணப்படுவதை உணர்த்துகிறேன்..

தமிழ் மக்கள் உணர்பூர்வமான வாக்களிப்பில் கலந்து கொண்ட கட்டமைப்பபை பார்க்கின்றபோது தங்களை அவர்கள் உளமார ஏற்றுக் கொண்டார்கள் என்பதை உணர்த்துகின்றது. பல இடர்கள் ஏற்பட்ட போதும் இடறி விழமாட்டோம் என்ற திடசங்கற்பத்துடன் வாக்களித்திருக்கிறார்கள்.

தங்களுக்கும் தங்கள் கட்சிக்கும் வாக்களித்த யாழ் முஸ்லிம் மக்களையும் அரவணைத்து அவர்களின் இடர் போக்கி வட மாகாண தமிழ் முஸ்லிம் மக்களை தங்களால் முடிந்தளவு முக்னேற்றகராமாக நடாத்தி செல்வீர்கள் என்று நம்புகின்றேன்.

உங்கள் காலம் வரையும் ஆட்சியை கொண்டு நடாத்தக் கூடிய அனைத்து வாய்ப்பினையும் உடல் ஆரேக்கியத்தையும் தந்தருள அல்லாஹ்வை வேண்டுகின்றேன். அனைத்து உறுப்பினர்களுக்கும் ஆசி உண்டாவதாக என பிராத்திப்பதோடு நல்லாட்சி நடைபெற வாழ்த்துகின்றேன் என தெரிவித்துள்ளார்.