கூட்டமைப்பின் பெயரில் சிலர் மோசடிச் செயற்பாடு?

tnaபுதுக்குடியிருப்பில் வேலை வாய்ப்புத் தருவதாகக் கூறி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் சிலர் விண்ணப்பப் படிவங்களை விநியோகித்து வருவதாகவும் அவற்றை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அன்ரனி ஜெயநாதன் தெரிவித்துள்ளார் .

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது :

புதுக்குடியிருப்பில் நேற்று சனிக்கிழமை முற்பகலிலிருந்து வேலைவாய்ப்புக் குறித்த விண்ணப்பங்களை விற்பனை செய்யும் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது .

பால் பண்ணைக் கூட்டுறவுச் சங்கத்துக்கு ஆள்சேர்ப்பு என்று கூறி ஒரு விண்ணப்பப் படிவமும், 2011 இற்கான வட மாகாண கனிஷ்ட ஊழியர் பதவிகளை நிரப்புவதற்கு என்று மற்றொரு விண்ணப்பப் படிவமும் முதலில் பணத்துக்கும் பின்னர் இலவசமாகவும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன .

தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அல்லது இந்த விடயங்கள் தெடர்புபடும் வடக்கு அமைச்சர்களோ இது தொடர்பில் எந்தவொரு விண்ணப்பத்தையும் விநியோகிக்கவோ , பொதுமக்களிடம் கோரவோ இல்லை . எனவே இந்த விடயத்தில் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்றார் அவர் .

தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அல்லது இந்த விடயங்கள் தொடர்புபடும் வடக்கு அமைச்சர்களோ இது தொடர்பில் எந்தவொரு விண்ணப்பத்தையும் விநியோகிக்கவோ , பொதுமக்களிடம் கோரவோ இல்லை .