கூட்டமைப்பின் பதிவு விண்ணப்பம் மீண்டும் நிராகரிப்பு

பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஏற்றுக் கொள்ளுமாறு விடுக்கப்பட்ட விண்ணப்பத்தைத் தேர்தல் செயலகம் நிராகரித்துள்ளது.கட்சிப் பதிவு தொடர்பில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் உரிய முறையில் பூர்த்தி செய்யப்படாத காரணத்தினால் கட்சிப் பதிவினை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது.

கட்சிப் பதிவு தொடர்பில் தேர்தல் செயலகத்துடன் அரசியல் கட்சிகள் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சகல ஆவணங்களையும் உரிய முறையில் சமர்ப்பிக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.