கூட்டமைப்பின் கூட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியவர்களை வாளால் துரத்திய வயோதிபர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது அங்கு திடீரெனப் புகுந்து கலகம் விளைவிக்க நினைத்த வேறு கட்சியின் உறுப்பினர்களை மக்கள் விரட்டியடித்த சம்பவம் நேற்று நடந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

நேற்றைய தினம் வேட்பாளர் சித்தார்த்தனுக்கு ஆதரவாக புங்குடுதீவில் பிரச்சாரம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது அங்கே வந்த தேர்தலில் போட்டியிடும் மற்றொரு கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதேச சபைத் தலைவர் ஒருவர் தலைமையில் வந்த கட்சியினரே இந்தப் பிரசாரத்தில் குறுக்கீடு செய்தனர்.

பிரச்சாரத்துக்கு இடையில் புகுந்த அவர்கள் தங்களது கட்சி சார்ந்த தேர்தல் பிரசுரங்களை மக்களிடம் விநியோகித்தனர். இதனையடுத்தே அங்கு திரண்டிருந்த மக்கள் குழப்பம் விளைவித்த கட்சி உறுப்பினர்களைத் தீட்டித் தீர்த்தவாறிருக்க அங்கு வந்த முதியவர் ஒருவர் வாளால் வீசி அவர்களை அங்கிருந்து விரட்டியடித்தார்.

Related Posts