கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்

tnaதமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் எதிர்வரும் சனிக்கிழமை (19 திகதி) யாழ்.பொதுநூலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்தது.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெறவுள்ள ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டத்தில் ‘ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைத் தீர்மானமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடப்பாடுகளும்’ என்ற தொனிபொருளில் ஆய்வொன்று இடம்பெறவுள்ளது.

மேலும், கிழக்கு மாகாண சபை, வடமாகாண சபை உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பாகவும் இதில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts