ஜப்பான் நாட்டின் 5S முறை பற்றி அனைவரும் அறிந்திருப்பர். ஆனால், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட்டமைப்பால் யாழில் உருவாக்கப்பட்டுள்ள ‘5 எஸ்’கள் பற்றி யாராவது அறிந்துள்ளீர்களா.
நாடாளுமன்ற ஊறப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ள சுமந்திரன், சேனாதிராசா, சிறிதரன், சரவணபவன், சித்தார்த்தன் ஆகிய ஐவருமே அந்த ‘5 எஸ்’கள் ஆவர். இந்த ஐவரின் முதற் பெயரும் ஆங்கிலத்தில் ‘எஸ்’ என்ற எழுத்தில் தொடங்குகின்றமையே ஆகும்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியிலிருந்து தெரிவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களே இவர்களாவர்.