கூகுள் நெட்வேர்க் கேபிள்களை கடித்து சேதப்படுத்திய சுறாக்கள்!

கடலுக்கு அடியில் இணைக்கப்பட்ட ‘கூகுள் நெட்வொர்க் கேபிள்’ களை சுறா மீன்கள் கடித்து சேதப்படுத்தியுள்ளன.கூகுள் நிறுவனம் தனது ‘நெட்வொர்க்’ பயன்பாட்டிற்காக, பசிபிக் கடலுக்கு அடியில் கண்ணாடி இழை கேபிள்களை இணைத்துள்ளது. இந்த கண்ணாடி இழை ‘கேபிள்கள்’ ‘சூப்பர் கார்டு மெட்டிரியல்’ மற்றும் ‘புல்லட் புரூப்’ போன்றவைகளால் உருவாக்கப்பட்டு, மிகவும் பாதுகாப்பாக மூடப்பட்டு இருக்கும்.

google-has-to-wrap-i.jpg

இந்நிலையில், இந்த ‘கேபிள்களை’ சுறா மீன்கள் கடித்து சேதப்படுத்தியுள்ளது. கடலுக்கு அடியில் இணைக்கப்பட்டுள்ள ‘கேபிள்’ இழைகளில் இருந்து சுறாக்களுக்கு மின்காந்த சமிக்ஞைகள் கிடைத்திருக்கலாம் என்றும், அதனால், கவர்ந்து இழுக்கப்பட்ட சுறாக்கள் ‘கேபிளை’ கடித்து சேதப்படுத்தி இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.