குவைத் பெண்ணிடம் கைகுலுக்கிய இலங்கை பிரஜை கைது

குவைத் நாட்டில் சாரதியாக பணியாற்றுகின்ற இலங்கை பிரஜை ஒருவர், அந்நாட்டு பெண் ஒருவருக்கு கை குலுக்குவது போல் அவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதால் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது பக்கத்து வீட்டுக்காரரான குறித்த இலங்கை பிரஜை, கை குலுக்குவது போல் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக, சாத் அல்-அப்துல்லா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார் என்று Arab Times இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த இலங்கை பிரஜையை அந்நாட்டு பொலிஸ் நிலைய அதிகாரிகள் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

எவ்வாறாயினும், தான் அந்தப் பெண்ணை மதிப்பிற்காக கைகுலுக்கினேன் என்றும், வேறு நோக்கங்கள் இல்லை என்றும் குறித்த இலங்கை பிரஜை விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.

சந்தேகநபரை தடுத்து வைத்து அந்த நாட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor