குழு மோதல்; ஐவர் கைது

யாழ். துன்னாலை வேம்பங்கேணி பகுதியில் குழு மோதலில் ஈடுபட்ட ஐவரை ஞாயிற்றுக்கிழமை(05) காலை கைது செய்ததாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி பகுதியில் வீதியில் சென்ற சிறுவன் ஒருவனை பிரடியில் அடித்தமை தொடர்பில் இரு குழுக்களுக்கிடையில் சனிக்கிழமை(04)சண்டை இடம்பெற்றது.

இதனையடுத்து, அங்கு சென்ற காங்கேசன்துறை பொலிஸ் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.நந்தனரணவீர தலைமையிலான பொலிஸ் குழுவினர், இரு குழுக்களையும் சமாதானம் செய்து வைத்தனர்.

இருந்தும், இன்று ஞாயிற்றுக்கிழமை(05) தொடர்ந்தும் குழுச்சண்டையில் ஈடுபட்டமையால், குழுச்சண்டையுடன் தொடர்புடைய ஐவரை கைது செய்ததாக நெல்லியடி பொலிஸார் கூறினர்.

கைது செய்யப்பட்ட ஐவரும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் கூறினர்.