11 மாத மகனை படுகொலை செய்து, சடலத்தை புகைப்படமெடுத்து பேஸ்புக்கில் வெளியிட்ட தாய்

தனது 11மாத மகனை படுகொலை செய்து அவனது சடலத்தை புகைப்படமெடுத்து பேஸ்புக் இணையதளத்தில் வெளியிட்ட இளம் தாயொருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

son-dead

mothe-killed -son

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து சர்வதேச ஊடகங்கள் இன்று வியாழக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.

நியூயோர்க் நகரில் குயின்ஸ் எனும் இடத்தைச் சேர்ந்த நிகொலி கெல்லி (22வயது ) என்ற பெண்ணே இவ்வாறு கியம் பீலிக்ஸ் என்ற தனது பாலகனான மகனை படுகொலை செய்துள்ளார்.

அதன் பின் அந்த சடலத்தை புகைப்படமெடுத்து பேஸ்புக் இணையதளத்தில் வெளியிட்ட கெல்லி, தனக்கு இனிமேலும் தனது மகன் தேவையில்லை என குறிப்பிட்டுள்ளார்.

எனது குழந்தையை இழந்துள்ள நிலையில் அவனை மீள என்னால் உயிர்ப்பிக்க ஏதாவது வழியிருக்குமானால் அவனை உயிர்ப்பிப்பதே எனது விருப்பமாகும். அவன் இறந்து விட்டான் என்பதை அறிகையில் மிகக் கஷ்டமாக உள்ளது. ஒரு தாய் என்ற வகையில் நான் அவனை பாதுகாக்க நினைத்தேன். அவனது ஆன்மா என்னையே சுற்றி வரும் என்பதை அறிவேன் என அவர் மேலும் அந்த இணையதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கெலியிடம் இருந்து பிரிந்து வாழும் அவரது கணவரே தனது மகன் இறந்து இருப்பதை கண்டு பொலிஸாருக்கு அது தொடர்பில் அறிவித்துள்ளார்.