Ad Widget

குழந்தைகளுக்கான மாதிரிக் கார் யாழில் வடிவமைப்பு

யாழ் மாவட்டத்தில் குழந்தைகளுக்கான மாதிரி காரொன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

car-baby

யாழ்ப்பண பல்கலைக்கழகத்தில் ஆங்கில விரிவுரையாளராக கடமையாற்றும் கலாநிதி மகேஸ்வர குருக்கள் சரவணபவ ஐயர் மற்றும் அவரது குழுவினரே குழந்தைகளுக்கான காரினை வடிவமைத்துள்ளனர்.

மூன்று மாதங்களில் பகுதி நேரமாக உருவாக்கப்பட்ட குறித்த காருக்கு, 30 ஆயிரம் ரூபா வரை செலவுசெய்யப்பட்டுள்ளது.

கழிவுப்பொருட்கள் மற்றும் கம்பிகள் போன்றவற்றை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள மாதிரிக் காரில் ஒரு குழந்தை மாத்திரம் பயணம் செய்ய முடியும்.

இதேவேளை, மின்கலம் (பற்றரி) மூலம் இயங்கும் இக் கார், குறுகிய மற்றும் நீண்ட தூரம் பயணிக்கும் வல்லமையுடையது.

Related Posts