வடமராட்சி, புறாப்பொறுக்கி என்னும் இடத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகிய நிலையில் 12 பேர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் திங்கட்கிழமை (25) அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புளியமரத்தில் இருந்து குளவிக்கூடொன்றுக்கு சிறுவர்கள் கல்லெறிந்தமையால், கலைந்த குளவிகள் வீதியில் சென்றவர்களைத் கொட்டியுள்ளது.