குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞர் சடலமாக மீட்பு

dead_water_bodyகுளத்தில் குளிக்கச் சென்ற இளைஞர் குளத்தில் முழ்கி உயிரிழந்துள்ளார்.வேலணை 8ஆம் வட்டாரத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியம் நிரோஜன் (வயது 18) என்ற இளைஞரே உயிரிழந்தவராவார். அதே இடத்தில் உள்ள வேணா குளத்தில் நேற்றயதினம் காலை 11.30 மணியளவில் மைத்துனருடன் குளிக்கச் சென்றுள்ளார்.

தன்னுடன் வந்த மைத்துனரை காணவில்லை என வீட்டில் தெரிவித்த போது 12.00 மணியளவில் உறவினர்களினால் இளைஞனின் சடலம் குளத்தில் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சடலம் குறித்து ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.