குர்-ஆனை இழிவுபடுத்தியதாக கிறிஸ்தவ ஜோடி அடித்துக்கொலை

பாகிஸ்தானில் குர்-ஆனை இழிவுபடுத்திவிட்டதாக குற்றஞ்சாட்டி கிறிஸ்தவ ஜோடி ஒன்றை முஸ்லிம் கும்பலொன்று அடித்துக் கொன்றுள்ளதாக பொலிசார் கூறுகின்றனர்.

blasphemy_law_pakistan

கொலை செய்யப்பட்ட இந்த ஜோடியை அவர்கள் வேலைபார்த்துவந்த செங்கல் சூளையிலேயே போட்டு அக்கும்பல் எரித்துவிட்டதாகவும் பொலிசார் கூறுகின்றனர்.
நாட்டின் கிழக்கில் லாஹூருக்கு அறுபது கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஒரு இடத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.

இஸ்லாத்தை இழிவுபடுத்துவதாக எழும் குற்றச்சாட்டுகள் பெரும் உணர்வலைகளை தூண்டக்கூடிய விடயமாக பாகிஸ்தானில் இருந்துவருகிறது.

மதச் சிறுபான்மையினரை இலக்குவைப்பதற்கோ, சொந்தப் பகையை தீர்த்துக்கொள்வதற்கோ சில நேரங்களில் மத நிந்தனை குற்றச்சாட்டுகள் பயன்படுத்திக்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.