குரங்கு பாய்ந்ததால் ஆசிரியை படுகாயம்

accidentமண்டுவில் சோலையம்மன் கோவில் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த ஆசிரியை ஒருவர் மீது குரங்கு பாய்ந்ததால், குறித்த ஆசிரியை நிலைகுலைந்து கீழே வீழ்ந்து படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நேற்றய தினம் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீசாலை மேற்கைச் சேர்ந்த ஈழநேசன் புனிதகுமாரி (வயது 52) என்ற ஆசிரியையே இவ்வாறு படுகாயமடைந்தார்.

கீழே வீழ்ந்ததால் இவரது ஒரு கை முறிந்துள்ளது.

இதேவேளை நேற்றய தினம் சாவகச்சேரி, மீசாலைப் பகுதியில் மோட்டார் சைக்கிளொன்றும் முச்சக்கரவண்டியொன்றும் நேருக்குநேர் மோதியதால் இயற்றாலையைச் சேர்ந்த சின்னத்துரை தெய்வேந்திரம் (வயது 62) என்பவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.