யாழ்.மாவட்டத்தில் குரக்கன் செய்கை உற்பத்தி பாரிய வீழ்ச்சியை கண்டு வருவதாக குரக்கன் பயிர்ச் செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அச்சுவேலி, புத்தூர், நீர்வேலி போன்ற பிரதேசங்களில் இந்த குரக்கன் செய்கைகள் பெருமளவு மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளபோதும் தற்போது அப்பிரதேசத்திலும் நூற்றுக்கு 20 வீதமான குரக்கன் உற்பத்தியே நடைபெற்று வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
‘ஆரம்பகாலத்தில் யாழ்.மாவட்டத்தில் வாழ்ந்த மக்களின் பிரதான உணவாக குரக்கன் இருந்துள்ளது. கால மாற்றத்திற்கு ஏற்ப மக்களின் உணவுப் பழக்கவழக்கங்களும் மாற்றம் அடைந்துள்ளது.
இத்துடன் குரக்கன் உற்பத்திக்கான ஊக்குவிப்பும் குறைவடைந்துள்ளதால் தமது வீட்டுத் தேவைக்காக உற்பத்தி செய்யும் நிலையே காணப்பட்டு வருகின்றது என்று குரக்கன் உற்பத்தியாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.