நெடுந்தீவு ஐக்கிய இராச்சியக் கிளையின் ஏற்பாட்டில் குமுதினி படுகொலை நினைவாக அண்மையில் நெடுந்தீவில் தென்னங்கன்றுகள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
1985ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி நெடுந்தீவீல் இருந்து குறிகட்டுவான் நோக்கிச் சென்று கொண்டிருந்த குமுதினி படகில் பயணம் செய்தவர்கள் மீது கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 36 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
அவர்களது 31ஆவது ஆண்டு நினைவையொட்டி நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் தென்னங்கன்றுகளை வழங்கி வைக்கும் நிகழ்ச்சி கடந்த 14ஆம் திகதி நடைபெற்றது.
கோட்டக்கல்விப் பணிப்பாளர் திருமதி கி.சாரதாதேவியின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் ஆகியோர் கலந்து கொண்டு 700 தென்னை மரக்கன்றுகளை வழங்கி வைத்துள்ளனர்.
இத்தென்னை மரக்கன்றுகள் வடமாகாண விவசாய அமைச்சுக்குச் சொந்தமான கிராஞ்சிப் பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட நல்லினக்கன்றுகள் என்பது குறிப்பிடத்தக்கது.