குதிரைகள் கடத்தப்படவில்லை: பொலிஸ்

யாழ்.நெடுந்தீவில் இருந்து எந்த குதிரைகளும் கடத்தப்படவில்லையென யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.பி.விமலசேன வெள்ளிக்கிழமை (12) தெரிவித்தார்.

மாத தொடக்கத்திற்கான ஊடகவியலாளர்கள் சந்திப்பு யாழ்.தலைமை பொலிஸ் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (12) இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நெடுந்தீவிலிருந்து எவ்வித குதிரைகளும் கடத்தப்படவில்லையென நெடுந்தீவு பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பெரிய குதிரைகளை படகுகள் மூலம் கடத்துவது எவ்வாறு தெரியாமல் இருக்கும். இருந்த போதும், அனுமதி பெறப்பட்டு குதிரைகள் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம். அதனை தவிர எந்த குதிரைகளும் கடத்தப்பட்டிருக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.