கோடரி வெட்டுக்கு இலக்கான குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச் சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று முன்தினம் மாலை 5.50 மணியளவில் அரியாலை மாம்பழம் சந்திப் பகுதியில் இடம் பெற்றுள்ளது.
இதில் அதே இடத்தைச் சேர்ந்த பேரின்பன் காண்டீபன் (வயது32) என்ற குடும்பஸ்தரே படுகாயமடைந்தவராவார்.
இரு தரப்பினரிடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடே மேற்படி கோடரி வெட்டுக்கு காரணம் என கூறப்படுகிறது.
இதுதொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸில் முறையிடப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.