குடும்பஸ்தர் திடீர் மரணம்

மதிய உணவு அருந்திய பின் நித்திரை செய்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் திடீர் என உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று யாழ்ப்பாணம் பிறவுண் வீதியில் இடம்பெற்றுள்ளது.

இதில் அதே இடத்தினை சேர்ந்த ஜகோன் உதயகுமார் (வயது 36) என்ற 2 பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

மதியம் உணவு உட்கொண்ட பின் நித்திரைக்கு சென்ற குடும்பஸ்தர் மாலை வரை எழும்பவில்லை. இதனையடுத்து உடனடியாக செயற்பட்ட குடும்பத்தினர் அவரை மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

எனினும் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சடலமானது பிரேதப் பரிசோதனை மற்றும் மரண விசாரணைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது

Recommended For You

About the Author: Editor