குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

dead-footஏழாலைப் பகுதியில் கிணற்றில் இருந்து குடும்பஸ்தர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஏழாலை வடக்கைச் சேர்ந்த சின்னராசா தர்மராசா (வயது 57) என்ற 6 பிள்ளைகளின் தந்தையாவார்.

மது அருந்தும் பழக்கமுடைய இவர் திங்கட்கிழமை காலையே கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

இந்த விடயம் குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு வந்த சுன்னாகம் பொலிஸார் விசாரணையின் பின்னர் சடலத்தை மீட்டனர்.

நீதிமன்றப் பணிப்புரைக்கு அமைவாக சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.

Recommended For You

About the Author: Editor