குடும்பஸ்தரை காணவில்லை என முறைப்பாடு

missing personகுடும்பஸ்தர் ஒருவரை காணவில்லை என முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.நல்லூர் அடையாளி வீதியைச் சேர்ந்த கணேஸ் மகேந்திரன் (வயது 52) என்ற நபரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

இவர் கடந்த 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை அரியாலைக்குச் செல்வதாக கூறி வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார்.

சென்றவரை இதுவரையில் காணவில்லை என புதன் கிழமை இரவு 11.00 மணியளவில் காணாமல் போனவரின் மனைவி முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக யாழ். பொலிஸார் மேலும் கூறினர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.