குடிநீர் தாங்கி அமைப்பதற்கு அடிக்கல்

கொழும்புத்துறை மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் நோக்கில் பிறவுண்ஸ் தனியார் நிறுவனத்தின் உதவியுடன் குடிநீர் தாங்கி அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றுள்ளது.

கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயத்திற்கு அருகாமையில் ஐந்து இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள தண்ணீர் தாங்கி அடிக்கல் நடும் நிகழ்வு யாழ். மேயர் யோகேஸ்வரி பற்குணராசா சம்பிரதாயபூர்வமாக நாட்டிவைத்தார். இந்த நிகழ்வில் மாநகர சபை உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.