குடத்தனை சம்பவத்தில் காயமடைந்த பெண்களிற்கு உணவு கொண்டு சென்ற 2 பெண்கள் கைது!

வடமராட்சி கிழக்கு குடத்தனையை சேர்ந்த இரண்டு பெண்கள் நேற்று (1) மாலை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று குடத்தனையில் மணல் கடத்தல்காரர் என்ற சந்தேகத்தில் ஒருவரை கைது செய்ய பொலிசார் முயன்றபோது, பெண்கள் ஒன்று சேர்ந்து அதற்கு இடையூறு ஏற்படுத்தினர்.

பொலிசாரால் பெண்கள் தாக்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர். எனினும், பொலிசார் அதை மறுத்தனர்.

இந்த நிலையில், காயமந்து படுகாயமுற்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு , வைத்திய சாலை அனுமதிப் பத்திரத்துடன் உணவு எடுத்துச் சென்ற இரு பெண்களை பருத்தித்துறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். 24 மற்றும் 26 வயதுடைய பெண்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடத்தனையில் இருந்து மந்திகையில் உள்ள பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குச் செல்லும் வழியல் மாவடிச் சந்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

Related Posts