குடத்தனையில் மினி சூறாவளி ; 6 வீடுகள் சேதம்

மருதங்கேணி, குடத்தனைப் பகுதியில் வீசிய மினி சூறாவளியினால் 6 வீடுகள் சேதமடைந்துள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயம் தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதியில் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் வீசிய பலத்த காற்றினால் 3 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 3 வீடுகளின் கூரைகளும் தூக்கி எறியப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இடர் முகாமைத்துவ அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட வீடுகளை நிர்மாணிக்கும் நடவடிக்கைகள் பிரதேச செயலாளர் ஊடாக மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor