கீரிமலை வரை பஸ்சேவைகளை நடத்தவும்: மக்கள் கோரிக்கை

keereemalaiகீரிமலை வரை தனியார் மற்றும் அரச போக்குவரத்து சேவையை நடத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து மாவிட்டபுரம் வரையான தனியார் பஸ் சேவையும் மற்றும் இலங்கை போக்குவரத்து சேவையும் நடைபெறுகின்ற போதிலும கீரிமலை வரை குறிப்பிட்ட பஸ் சேவைகள் நடைபெறாமையால் பொது மக்கள் பல்வேறான அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

குறிப்பாக கிரிமலை செல்ல வேண்டியவர்கள் சுமார் மூன்று கிலோ மீற்றர் தூரம் வரை நடந்து செல்ல வேண்டிய நிலமை காணப்படுவதுடன் முச்சக்கரவண்டிகளுக்கும் பணம் செலுத்தி செல்ல வேண்டிய நிலமை காணப்படுகின்றது.

இதே போன்று வலி வடக்கு பிரதேச செயலகம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை வங்கிகள் கமத்தொழில் தினைக்களம் கால் நடை தினைக்களம் உட்பட மற்றும் பணிகளுக்கும் கீரிமலை பொது மக்கள் காங்கேசன்துறை வீதி வழியாகவே வரவேண்டிய நிலையும் காணப்படுகின்றது.

இத்தகைய நிலையில் குறிப்பிட்ட மூன்ற கிலோ மிற்றர் தூரத்திறக்கான பஸ் சேவை இன்மையால் பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இவற்றை கருத்தில் கொண்டு கீரிமலை மாவிட்டபுரம் வரை காங்கேசன்துறை வீதி வழியாக நடைபெறும் அனைத்து பஸ் சேவைகளையும் நடத்துவதற்கு உரிய அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என பொது மக்கள்கோரிக்கை விடுத்துள்ளார்கள்.