 யாழ். கீரிமலை நகுலேஸ்வரர் கோவிலின் வருடாந்தத் திருவிழாவை முன்னிட்டு விசேட பேரூந்து சேவை மேற்கொள்ளப்படுமென தெல்லிப்பழை பிரதேச செயலர் கே.ஸ்ரீமோகனன் தெரிவித்தார்.
யாழ். கீரிமலை நகுலேஸ்வரர் கோவிலின் வருடாந்தத் திருவிழாவை முன்னிட்டு விசேட பேரூந்து சேவை மேற்கொள்ளப்படுமென தெல்லிப்பழை பிரதேச செயலர் கே.ஸ்ரீமோகனன் தெரிவித்தார்.
மேற்படி கோவிலின் வருடாந்தத் திருவிழா எதிர்வரும் 14ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 28ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
தற்போது காங்கேசன்துறை வீதி வழியாக மாவிட்டபுரம் வரை சேவையில் ஈடுபடும் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேரூந்துகள் 14ஆம் திகதியிலிருந்து கீரிமலை நகுலேஸ்வரம் வரை செல்லுமெனவும் அவர் கூறினார்.
இது தொடர்பில் பிரதேச செயலகத்தில் கடந்த 7ஆம் திகதி நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இந்தக் கலந்துரையாடலில் வலி. வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன், தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதிநிதிகள், நகுலேஸ்வரர் ஆலய தர்மகத்தா சபை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டதாகவும் அவர் கூறினார்.
 
					



 
												
							 
												
							 
												
							 
												
							 
												
							