கீரிமலையில் பெரும் நந்தவனம் அமைக்க நடவடிக்கை!

வரலாற்று சிறப்பு மிக்க கீரிமலைப் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான காணியில் பெருமளவு மலர்கள் கொண்ட நந்நதவனம் ஒன்று அமைப்பதற்கான முன் முயற்சி நடவடிக்கைகளை சிவபூமி அறக்கட்டளை நிதியத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிவபூமி அறக்கட்டளை நிலையத்தின் ஸ்தாபகர் ஆறு திருமுருகன் தெரிவித்துள்ளார்.

இதற்கான காணியை ஆஸ்திரேலியா நாட்டில் வாழும் மூவர் தமது தாய் தந்தையர்களின் நினைவாக வழங்கியுள்ளனர் எனவும் இந்த நந்தவனத்திற்கு வேண்டிய மலர் கன்றுகள் யாவும் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்டு நடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறிப்பிட்ட நந்தவனம் அமைப்பதற்கு வேண்டிய ஆரம்ப நடவடிக்கையாக குறிப்பிட்ட திட்ட செயற்பாடுகள் சம்பந்தமாக இந்தியாவின் இலங்கைக்கான துணைத் தூதரகத்தில் உள்ள தூதருடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் இதற்கு வேண்டிய தொழில்நுட்ப உதவிகள் உட்பட ஏனைய உதவிகளையும் வழங்க தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார் எனவும் ஆறுதிருமுருகன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயங்களில் இடம்பெறும் விசேட பூசை வழிபாடுகளுக்கு வேண்டிய பூக்கள் இந்தியாவில் இருந்தும் தென்னிலங்கையில் இருந்தும் கொண்டுவரப்படும் நிலைமை காணப்படுகின்றது. இந்நிலையில் கிடைக்கும் உதவிகளைக் கொண்டு நல்லதொரு சிறந்த நந்தவனத்தை உருவாக்குவதன் மூலம் பொதுமக்களும் பொழுது போக்காக மனதுக்கு இனிய காட்சிகளை காண்பதுடன் ஆலயத் தேவைக்கு வேண்டிய பூக்களையும் பெறமுடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Posts